சிறு குறிஞ்சா
சிறு குறிஞ்சா என்பது இலங்கை மற்றும் தென்னிந்தியாவின் காடுகளில் இயற்கையாக வளரும் மூலிகை வகையைச் சேர்ந்த தாவரமாகும். இது வேறு மரங்களைப் பற்றிப் படர்ந்து வளரும் தன்மையினைக் கொண்டுள்ளது.
எதிர் அடுக்குகளில் இலைகளைக் கொண்டுள்ள இத்தாவரமானது இலைக் கோணத்திலேயே பூக்களையும் கொண்டுள்ளது. இதன் இலைகளும், வேர்களும் மருத்துவ குணம் கொண்டவை.
ஆங்கிலத்தில் ஜிம்னெமா(gymnema sylvestre) என அழைக்கப்படும் இத்தாவரமானது, சித்த மருத்துவத் துறையிலும், ஆயுள்வேத மருத்துவத் துறையிலும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் சித்த மருத்துவத் துறையில் இதனை சர்க்கரைக் கொல்லி எனவும் அழைக்கின்றனர்.
எமது உறுப்புக்களில் ஒன்றான கணயத்தினால் சுரக்கப்படும் இன்சுலின் சுரக்கப்படுவது தடைப்படுவதினால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கின்றது. இவ்வாறு இரத்தத்தில் கலக்கும் அளவுக்கதிகமான சர்க்கரையானது சிறுநீருடன் வெளியாகின்றது. இதுவே ஆங்கிலத்தில் டயபட்டீஸ் என அழைக்கப்படுகின்றது. தமிழில் நீரிழிவு வியாதி என அழைக்கப்படுகின்றது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் இதயம், இரத்தக்குழாய்கள், நரம்பு மண்டலம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புக்கள் பாதிப்படைந்து நாளடைவில் மரணத்தை விளைவிக்கும் நிலை உருவாகும்.
இந்நோய் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தாலும், ஆங்கில மருத்துவத் துறையில் இந்நோயை முற்று முழுதாக குணப்படுத்த முடியாதெனவும்,சித்த மற்றும் ஆயுள்வேத மருத்துவத்துறையில் இதனைக் குணப்படுத்த எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், சித்த, ஆயுள்வேத மருத்துவத் துறைகள், கவனமாக சிகிச்சை பெறுவதன்மூலம் இதனை முற்றுமுழுதாக கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பதிணெண் சித்தர்களில் ஒருவரான தேரையர் நீரிழிவு பற்றிக் கூறியிருப்பதாவது,
அறுசுவை என்பது தற்செயலாக ஏற்பட்ட உணவு முறையல்ல எனவும், அது திட்டமிடப்பட்ட ஒரு உணவு முறையெனவும் தெரிவித்துள்ளார்.
அதாவது, கணயம் என்ற உறுப்பானது இன்சுலினைச் சுரந்து எமது உணவினை சக்தியாக மாற்றமடையச் செய்கின்றது.
கணயம் இயங்குவதற்கு அறுசுவைகளுள் ஒன்றான கசப்புச் சுவையானது மிகவும் முக்கியமானது.
நாம் எமது உணவில் பாகற்காய் போன்ற கசப்பான காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் அறுசுவைகளில் ஒன்றான கசப்புச் சுவையை பெறமுடியும்.
அதேவேளை உமிழ் நீர் சுரப்புக்கு உப்பும், புளிப்பும் இன்றியமையாதது. உமிழ் நீரில் சுரக்கும் ‘தயாளின்’ எனப்படும் வேதிப் பொருளானது உணவிலுள்ள மாப்பொருளை சர்க்கரையாக மாற்ற உதவுகின்றது. இதேபோன்று இனிப்பும், உறைப்பும் வேறு தொழிலைச் செய்கின்றன. இவ்வாறு அறுசுவையையும் கூடிக்குறையும் போதே நீரிழிவு போன்ற நோய்கள் உருவாவதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், உலகையே ஆட்டிப்படைத்துவரும் நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு ஆங்கில மருத்துவத் துறையில் பல பல்தேசிய நிறுவனங்கள் பல மருத்துகளை உற்பத்தி செய்து வருகின்றன.
இவைகள் பக்கவிளைவுகளைக் கொண்டுள்ளதுடன், நாளடைவில் வேறு வியாதிகளையும் உருவாக்கக்கூடியவை.
அத்துடன், இம்மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள், தமது மருந்து மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம், நீரிழிவு நோயிலிருந்து விடுபடமுடியும் என பொய் விளம்பரங்களைச் செய்து வருவதுடன், வைத்தியர்கள் மூலம் மக்களை ஏமாற்றி தமது மருந்துக்கு அடிமையாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால், சித்த மருத்துவத்துறையில் ‘உணவே மருந்து’ என்ற வாசகத்துக்கமைய உணவின் மூலம் பல நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய சித்த மருத்துவத் துறையில் நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு சிறுகுறிஞ்சா இலைகள் பண்டய காலம் தொட்டு பயன்படுத்துப்பட்டு வருகின்றது.
சிறுகுறிஞ்சா இலைகளில் உள்ள ஜிம்னீமிக் அமிலம் சர்க்கரைக்கான ஆசையினை கட்டுப்படுத்துகிறது. நாவிலுள்ள உணர்ச்சி மொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்கிறது. அத்துடன் கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின் சுரப்பினை மேம்படுத்துகிறது.
இச்சிறு குறிஞ்சா இலையை உணவாகவோ, பானமாகவோ உள்ளெடுக்கமுடியும். அதாவது, நாளாந்த உணவில் வறையாகவோ, சம்பலாகவோ சேர்க்கமுடியும். அதைவிட தேநீராகவும் அருந்தலாம்.
நீரிழிவு நோயாளியொருவர் நாளாந்தம் 15 கிராம் குறிஞ்சா இலைகளை உள்ளெடுப்பதன்மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
தற்போது சிறுகுறிஞ்சா இலைகளில் தேயிலையும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இத்தேயிலைப் பொதியினுள் இருக்கும் ஒரு சிறு பொதியினுள் 1.5கிராம் குறிஞ்சா இலைத் துகள்கள் அடங்கியுள்ளன. இவை 15 கிராம் குறிஞ்சா இலைகளுக்குரிய சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.
இத்தேயிலையானது, உள்ளூரிலிருந்து பெறப்படும் சிறுகுறிஞ்சா இலைகள் சுத்தப்படுத்தப்பட்டு அதன் சத்துக்கள் இழக்கப்படாதவகையில் காயவைக்கப்பட்டு சுகாதாரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு பொதி செய்யப்படுகின்றது.
இதன் ஆரோக்கிய பலன்கள்
-
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகின்றது.
-
எடை குறைப்பைத் தூண்டுகின்றது.
-
செரிமானத்தை ஊக்குவிக்கின்றது.
-
சிறுநீர் வெளியேற்றத்தைத் தூண்டுகின்றது.
-
கெட்ட கொழுப்பைக் குறைக்கின்றது.
-
குடல் இயக்கத்தைச் சீராக்குகின்றது.