துளசி
துளசி ஒரு மூலிகைச் செடியாகும். இதில் பலவகையுண்டு. அவற்றுள் நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, ஆகியவை முக்கியமானவை இதில் நல்துளசி மற்றும் கருந்துளசி ஆகியவையே அதிகளவான மருத்துவத் தேவைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இதன் அனைத்துப் பாகங்களும் மருத்துவ குணமுடையவை. இது 50 சென்ரிமீற்றர் வரை வளரக்கூடியது.
இந்த மூலிகைச் செடியானது இலங்கை, இந்தியா மற்றும் அந்தமான், நிக்கோபார் தீவுகளில் வளர்கின்றது. இது இயற்கையாகவே வளரும் தாவரமாகும்.
இதன் அதீத மருத்துவக் குணத்தினால் மூலிகைகளின் அரசி என அழைக்கப்படுவதுடன், இச்செடி வளரும் பிரதேசத்தை சுத்தமாகவும் பேணுகின்றது. பொதுவாகவே தாவரங்கள் அனைத்தும் காபனீரொட்சைட்டை உள்வாங்கி ஒட்சிசனை வெளிவிட்டாலும், துளசியானது, அதன் மருத்துவக் குணத்தினால் அதனை அண்டிய பிரதேசத்திலுள்ள கிருமிகளை அழிக்கின்றது. இதற்கு அதில் அடங்கியுள்ள சிட்ரோநெல்லோல் (Citronellol ) என்ற வேதிப்பொருள் துணைபுரிகின்றது.
இதன் காரணமாகவே இந்து ஆலயங்களிலும், பொதுவாக தமிழ் மக்களின் வீடுகளிலும் துளசிச் செடி வளர்க்கப்பட்டு வருகின்றது. இதன் அதி அற்புதமான மருத்துவக் குணத்தினால், அதனை மக்களிடையே பரப்பவேண்டுமென்ற காரணத்திற்காகவே பண்டைய காலத்தில் கடவுளின் பெயரைக்கூறி மக்களிடையே பிரபலமடைய வைத்ததாகவும் சில நூல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, துளசியானது சித்த வைத்தியத் துறையில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றது.
பொதுவாக சளித் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு, துளசி இலை சிறந்த மருந்தென சித்த வைத்தியம் தெரிவிக்கின்றது. இதில் அடங்கியுள்ள Citronellol, Myrcene, Limonene, Camphene, Anothole, Cimeole போன்ற வேதிப் பொருட்கள் நுரையீரல் மற்றும் சளி தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாகச் செயற்படுகின்றது.
துளசி இலையில் யூஜினால் (Eugenol) எனும் வேதிப்பொருள் நிறைந்துள்ளதால் இது தொற்றுநோய்கள் தாக்காதவாறு பாதுகாத்துக்கொள்கின்றது. இதனால், குடலின் தசைகள் சீராகச் செயற்படுவதுடன், இளமையில் முதுமை, உடல் வலுக்குன்றல் போன்ற பிரச்சனைகள் அற்றுப் போகின்றது.
இதைவிட துளசியின், பூ, வேர், தண்டுகள் அனைத்தும் சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
எப்படியிருப்பினும், நாளுக்கு நாள் மருத்துவம் முன்னேறி வரும் நிலையில் மனிதர்களை புதுப்புது நோய்களும் ஆட்கொண்ட வண்ணமேயுள்ளன.
இந்நிலையில் மக்கள் தமது முன்னோர்கள் எவ்வாறு சித்த மருத்துவத்தால் நோய், நொடியின்றி நீண்ட காலம் நோயின்றி வாழ்ந்தார்களோ அம்முறையைப் பின்பற்றத் தொடங்கினாலும், அது அனைத்து மக்களாலும் சாத்தியமற்ற நிலை உருவாகியுள்ளது
இதற்கு பல்தேசியக் கம்பனிகள் காரணமாக அமைந்துள்ளது. இக்கம்பனிகளே எமது நாட்டில் அனைத்தையும் தீர்மானிக்கின்றன. யுத்தத்தின் பின்னர், மக்களுக்கு உதவுவதாகக் கூறி பல்வேறு வணிக நிறுவனங்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை வழங்கி அதற்கான பசளைகள் மற்றும் கிருமி நாசினிகளை அறிமுகம் செய்தன.
அதேபோல், நமது நாட்டுப் பசுக்களுக்குப் பதிலாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசுக்கள் வழங்கப்பட்டு அதற்கு உணவாக மாஸ், மற்றும் கல்சியம் வில்லைகளை வழங்கி வருகின்றன.
இவற்றின்மூலம் மக்கள் நாளுக்கு நாள் புதுப் புது நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்நோய்களுக்கான மருந்துகளையும் இந்த நிறுவனங்களே உற்பத்தி செய்து மக்களுக்கு விநியோகித்து வரும் அதேவேளை தமது மருந்துகளுக்கான நோய்களையும் உருவாக்கி வருகின்றன. இதற்கு உதாரணமாக 2017ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறவிருந்த சமயத்தில் சிக்கா என அழைக்கப்படும் வைரசானது, திட்டமிட்டு பரப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவற்றின்மூலம் கொள்ளை இலாபம் பெறும் இப்பல்தேசிய நிறுவனங்கள், மக்களை தங்கிவாழும் சமூகமாக மாற்றுகின்றன.
இதிலிருந்து மக்கள் விழிபடைந்து, நமது முதாதையர்களின் வழியைப் பற்றுதலே சாலச் சிறந்ததாகும்.
இதன் ஆரோக்கிய பலன்கள்
-
முகப்பரு பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றது.
-
நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.
-
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலையில் பேணுகின்றது.
-
ஓமோனை சமலைப்படுத்துவதுடன் ; மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்கின்றது.
-
காய்ச்சலைக் குணப்படுத்துகின்றது.
-
சுவாசம் தொடர்பான நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றது.
-
இதயம் தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.
-
பல் மற்றும் வாய் வழி ஆரோக்கியத்தைப் பேணும் சிறந்த மூலிமை
-
தலையிடியிலிருந்து விடுதலையளிக்கின்றது.
-
கண்ணின் ஆரோக்கியத்தைப் பேண உதவுகின்றது.