முருங்கை
சித்தர்களால் பிரம்ம விருட்சம் என அழைக்கப்படும் முருங்கை மரமானது மணற்பாங்கான பிரதேசத்தில் அதிக நீரின்றி வளரும் ஒரு தாவரமாகும். இதன் இலை, பூ, காய், பட்டை, பிசின் என அனைத்தும் மருத்துவத் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இது இமயமலைச் சாரலின் கீழ்ப் பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும் பின்னாளில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆபிரிக்கா மற்றும் இலங்கை, தென்னிந்தியா போன்ற பிரதேசங்களிலும் பயிரிடப்பட்டு வருகின்றது.
இத்தாவரமானது தமிழில் முருங்கை என அழைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் பெயரை ஒத்தே ஆங்கிலத்தில் மொறிங்கா என அழைக்கப்பட்டு வருகின்றது.
முருங்கையின் அனைத்துப் பாகங்களும் சித்த வைத்தியத் துறையில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இதன் இலையில் அடங்கியிருக்கும் அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களினால் உலகளவில் மக்களால் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன் முருங்கை இலைகளில் அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களான இரும்பு, விற்றமின் பி, சி, கே, பீட்டா கரோட்டின், மங்கனீஸ், புரதம் ஆகியவை அதிகளவில் அடங்கியுள்ளதால் வளர்முக நாடுகளில் ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் முருங்கைப் பூவிலும் அதிகளவான சத்துக்கள் நிறைந்துள்ளன. இது பற்றி,
விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி – அகத்தியர் குணபாடம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய கணினி யுகத்தில் பெரும்பான்மையான மக்கள் கண்பார்வைக் குறைபாட்டால் அவதிப்படுகின்றனர். நாம் தொடர்ந்து கணினியையோ, தொலைக்காட்சியோ, மொபைல் போன்களையோ பார்ப்பதால் கண்ணசைக்கும் வீதம் குறைகின்றது. இதனால் கண்களில் எரிச்சல் மற்றும் கண் வறண்டு போதல் பார்வைக் குறைப்பாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றது.
இதற்கு பசும்பாலுடன் முருங்கைப் பூவைச் சேர்த்து காய்ச்சி காலை மற்றும் மாலையென இரண்டுநேரமும் அருந்திவர கண்களில் ஈரப்பசை அதிகரித்து கண் பார்வை மேம்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஞாபகசக்தி பெருக, மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற பிரச்சனைகளுக்கும் முருக்கம்பூவை உணவில் சேர்க்குமாறு சித்த மருத்துவம் ஊக்குவிக்கின்றது.
அனைத்திற்கும் மேலாக முருங்கையை இயற்கை வயாகரா எனவும் அழைக்கின்றனர். நாம் அன்றாடம் செய்தித்தாள்களை திறக்கும்போது பலவிதமான வயாகரா மாத்திரைகளுக்கான விளம்பரங்களைக் காண்கின்றோம். இவற்றினைப் பணம் கொடுத்து பல்வேறு பக்கவிளைவுகளையும் பெற்றுக்கொள்ளும் நாம் எமது வைத்திய முறைக்கமையவும், எந்தவித பக்கவிளைவற்றதுமான முருங்கையை பயன்படுத்தி நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வோம்.
இதற்கமைய முருங்கை இலையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இத்தேயிலையானது, மரத்திலிருந்து பறிக்கப்பட்ட பச்சை இலைகளை நீரில் கழுவி இயந்திரத்தில் காயவைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றது.
இத்தேயிலைப் பொதியினுள் இருக்கும் ஒவ்வொரு பொதிகளும் 1.5 கிராமைக் கொண்டுள்ளன. 1.5 கிராம் பொதியில் 15 கிராம் முருக்கமிலையின் சத்துக்கள் அடங்கியுள்ளன.
இத்தேயிலையின் ஆரோக்கிய பலன்கள்
-
நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்துகின்றது.2. மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
-
அஸ்மா நோயைக் கட்டுப்படுத்துகின்றது.
-
அனிமிக் எனப்படும் இரத்தசோகை நோயைக் கட்டுப்படுத்துகின்றது.
-
உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்துகின்றது.
-
சிறுநீரக நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.
-
காயங்களை விரைவில் குணப்படுத்துவதுடன், காயங்களினால் ஏற்படும் குருதி இழப்பைக் கட்டுப்படுத்துகின்றது.
-
தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.
-
கண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், எலும்பின் ஆரோக்கியத்தையும் பேணுகின்றது.
-
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றது.